அதிகாரமே இல்லை.. .வாயை மூடி பேசவும் : அதிமுகவின் முடிவு குறித்து வானதி சீனிவாசன் பளீச்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 7:59 pm

அதிகாரமே இல்லை.. .வாயை மூடி பேசவும் : அதிமுகவின் முடிவு குறித்து வானதி சீனிவாசன் பளீச்!!

இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது குறித்து ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தேசிய தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் எந்த கருத்தையும் வெளியிடுவதாக இல்லை. இது குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள் அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம்.

அதிமுக வினர் கூறிய கருத்துக்களும் அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?