பாலாவுடன் எந்த பிரச்சனையும் இல்ல.. சரச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா.!

Author: Rajesh
26 May 2022, 2:24 pm

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களின் மிக முக்கியமானவர் தான் பாலா. தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பாலாவின் கம்பேக்வுக்காக தான் அதிக ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்தளவுக்கு தனது முந்தைய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். ஆனால், அவரின் சமீபத்திய திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பபை மீண்டும் பூர்த்தி செய்ய இந்த முறை இயக்குனர் பாலா சூர்யாவுடன் கோர்த்து புதிய படத்தை ஆரம்பித்து இருந்தார்.

இந்த படத்தில் சூர்யா உடன், ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, மமிதா பாஜு என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நாகர்கோவிலில் நடைபெற்ற போது, இயக்குனர் பாலா சூர்யாவுடன் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் படப்பிடிப்பின் பாதியில் கிளம்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் தொடர்ந்து படத்தயாரிப்பு நிறுவனம் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில், இயக்குனர் பாலா, ஷூட்டிங்கில் சூர்யாவை அதிகமாக தொந்தரவு செய்து வருகிறார் என்றும் அதனால் மீண்டும் அந்த படம் மீண்டும் துவங்குமா என்பது குறித்து இணையத்தில் வதந்திகள் பரவின.

இந்த நிலையில் நடிகர் சூர்யா, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உங்களது படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று சூர்யா ட்டுவிட்டரில் பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!