கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2025, 6:03 pm

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக, தமிழ்நாடு அரசியல் களம் தொடர்பாக பொதுவெளியில் எதுவும் சொல்லாமல் மறுத்து வருகின்றார்.

இதையும் படியுங்க: மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

இந்த நிலையில் செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வருகை புரிந்தார், அப்போது அவர், பத்திரிகையாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், வணக்கம் மட்டுமே சொல்லி, சிரித்துக் கொண்டே காரில் ஏறி கிளம்பினார்.

செங்கோட்டையன் ஏறி சென்ற காரில் அ.தி.மு.க தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு இருந்தன. பொதுவாக கட்சி பிரமுகர்களின் காரில் டேஸ்போர்டில், முன் பகுதியில் சொந்த கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும் .

No Response from Aiadmk Former minister Sengottaiyan

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் ஏறி சென்ற காரில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எந்த படமும் இடம்பெறவில்லை,

  • actor sri ‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!
  • Leave a Reply