பிரதமர் படத்த தூக்கி எறிவாங்க.. இவங்க கிட்ட பிச்சை எடுக்கணுமா… ஆட்சியருக்கு பொறுப்பே இல்ல : பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 4:57 pm

கோவை : வெள்ளலூர் பேரூராட்சியில் பிரதமர் புகைப்படத்தை திமுக கவுன்சிலர் அகற்றிய விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினரால் பரபரப்பு ஏற்பட்டது..

நேற்று முன்தினம் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் பிரதமர் புகைப்படத்தை மாட்டினர். இதனை அடுத்து திமுக கவுன்சிலர் கனகராஜ் அதனை அகற்றினார்.

இதனால் பாஜகவினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுக கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திரண்டதால் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலை அடைந்தனர்.

இதனால் பாஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இன்று வந்த பாஜகவினரில் ஒரு குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயும் மற்றொரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியும் காத்திருக்கின்றனர்.

இதனிடையே பாஜகவினர் கண்ட முழக்கங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்ததால் காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர். சிலர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொருளாளர் எஸ்.ஆர் சேகர், மாவட்ட ஆட்சியர் திமுக பொறுப்பாளர் போல செயல்படுகிறார். பிரதமர் படத்தினை கவுன்சிலர் தூக்கி எறிந்துள்ளார். இதற்காக அவங்க கிட்ட பிச்சை எடுக்கணுமா என காட்டமாக பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1090

    0

    0