ரயில் வருமா? வராதா? கனமழையால் காட்பாடியில் 2 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு!
Author: Udayachandran RadhaKrishnan30 November 2024, 8:13 pm
புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் அதிக அளவு மழை பெய்து வருவதால் வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால்,
சென்னையிலிருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக வர வேண்டிய ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
இதையும் படியுங்க: ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு.. ஃபெஞ்சல் புயலில் சோகம்!
அதேபோல் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் பயணிகளும் சுமார் இரண்டு மணி நேரம் காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிருப்பதால் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் காட்பாடியில் இருந்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.