‘வலிக்குது-னு சொல்லியும் அனுப்பீட்டாங்க.. தமிழக அரசு எனக்கு எந்த சிகிச்சையும் கொடுக்கல’… ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர் பகீர் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan9 June 2023, 8:38 am
தமிழக அரசு சார்பாக தனக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை என ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் குருசலாப்பட்டு பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் தமிழ்நாட்டில் இருந்து பங்களாதேஷிற்கு அசோக் லேலண்ட் லாரி சேஸ்களை எடுத்துச் செல்லும் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சம்பவம் நடைபெற்ற அன்று ஹௌராவிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பும் பொழுது, ஒடிசா அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் காயம் அடைந்தார்.
இந்த நிலையில் அவரை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மூலமாக சிறப்பு ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பப்பட்டு சென்னையில் எந்த விதமான மருத்துவ உதவிகளும் செய்யாமல் தன்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, தற்போது சொந்த ஊர் திரும்பிய நிலையில், இதுவரை தமிழ்நாடு அரசு சார்பாக எந்த விதமான உதவியும் செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.