பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு நோபல்.. நீட் ரகசியத்தை உடைத்த உதயநிதிக்கு டாக்டர் : எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2022, 1:19 pm
மதுரை : நீட் தேர்வு குறித்து பொது மேடையில் விவாதம் செய்ய தயார் என மதுரையில் நடைபெற்ற அதிமுக மாமன்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை புதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திருப்பரங்குன்றம் எம் எல்.ஏ ராஜன் செல்லப்பா தமிழக எதிர் கட்சி தலைவரும் அதிமுக இணை- ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.
பின்னர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, தமிழக தேர்தல் ஆணையம் நகர்புற தேர்தலை அறிவித்து தேர்தல் துவங்கப்பட்டு விட்டன. மதுரை நகர் புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கை அளித்து வெற்றிபெற வைக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பு. உள்ளாட்சியில
பெரும்பான்மையான இடம் கிடைக்கும் போது மேயராக வாய்ப்பு கிடைக்கும்.
மதுரை மாநகராட்சி மூலமாக, குடிநீர், சாலை, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பொறுப்பு மாமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது. இதை நிறைவேற்ற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டும். அமைச்சரவையில் முக்கியமான துறை உள்ளாட்சி என்றார்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் வாழ்ந்தவர்கள். மதுரை என்று சொன்னாலே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவின் கோட்டை. 1978 ஆம் ஆண்டும் மதுரையை எம்.ஜி.ஆர் மாநகராட்சியாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து கடந்த 44 ஆண்டுகாலத்தில் அதிமுக காலத்தில் பல நன்மைகள் திட்டங்களை மதுரைக்கு செய்து உள்ளோம்.
திமுக மதுரைக்கு எதும் செய்யவில்லை. திமுக உள்ளாட்சியில் வந்துவிட்டால் கொள்ளை அடிப்பார்கள் இருப்பதை எல்லாம் எடுத்துச் சென்று விடுவார்கள் என்றார். திமுக கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வந்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் நேற்றைய தினம் ஓர் சவால் விட்டார் உங்களுடைய சவாலை நாங்கள் ஏற்கிறோம். நீட் தேர்வு என்ற நச்சு விதை யார் ஆட்சியில் விதைக்கப்பட்டது. நீட் தேர்வு பற்றி விவாதம் செய்ய பொது மேடையை ஏற்பாடு செய்யுங்கள் நாங்கள் வருகிறோம் மக்கள் தீர்மானிக்கட்டும் எது உண்மையென்று என கூறினார்.
திமுக ஆட்சி வந்ததவுடன் நீட் தேர்வு ரத்து என கூறினீர்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து 9 மாதம் கடந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வில்லை. பொய் பேசுவதற்கான நோபல் பரிசை முதலவர் முக ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்.
தேர்தல் சமயத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். தற்போது தொடந்து மத்தியில் பேசி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார். தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்வதுதான் உங்கள் ரகசியமா?? பிளேட்டை மாற்றும் வேலையை திமுகவினர் செய்து வருகிறது.
மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்ற ரகசியத்தை கண்டுபிடித்து வெளியீட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே அளிக்கலாம். நீட் குறித்து பொதுமேடையில் சந்திக்க தயார். நானும், ஓ.பி.எஸ் அவர்களும் தயார்.
தேர்தல் போது மட்டுமே இவர்கள் சவால் விடுகின்றனர். தேர்தலுடன் திமுகவின் சாவல் முடிந்துவிடும். நாட்டின் முதல்வர் மக்களிடம் நீட் குறித்து பொய்யை பரப்புகிறார்.
2010ல் நீட் கொண்டு வந்தது திமுக என மு.கஸ்டாலின் ஒப்புக்கொண்டுவிட்டார்.
நீட் என்ற நச்சு விதையை தமிழகத்தில் ஊன்றியது காங்கிரஸ், திமுக. அதன் பின் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வை தடுக்க அதிமுக பல வழக்குகளை தொடர்ந்தோம். உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நீட் ரத்து என கூறினார்கள் ஆனால்
காங்கிரஸ் கட்சி அதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது அதனால் தான் நீட் மீண்டும் வந்தது..
ஸ்டாலின் அவர்கள் நீங்கள் எப்போது அழைத்தாலும் அதற்கு பதிலளிக்க நாங்கள் தயார். மதுரை மாநகராட்சியில் அதிமுக 100 இடங்களில் போட்டியிடுகின்றனர் 100லும் வெற்றிபெற வேண்டும்.
70% அறிவிப்பு நிறைவேற்றி விட்டதாக திமுக முதல்வர் பச்சை பொய் கூறுகிறார். அப்படியென்றால் 400 வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என கேள்வி எழுப்பினார். கேட்கிறவன் கேனையாக இருந்தால் அதற்கு பின் வருவதை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்.
இந்தியாவிலேயே சூப்பர் முதலவர் என தன்னை சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின் பொய் சொல்வதில் தான் முதலர்வர்களுக்கெல்லாம் முதல்வர். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார். திமுக உள்ளாட்சி தேர்தலில் என்ன சொல்ல முடியும் ஊழல், கொள்ளையடித்தை சொல்லித்தான் ஓட்டுக் கேட்க வேண்டும்
அதிமுகவிற்கு பொய் சொல்லி ஆட்சிக்கு வர வேண்டுமென அவசியம் இல்லை. திமுகவில் கருணாநிதி அவருக்குப் பின் அவர் மகன் மு.க ஸ்டாலின் தற்போது முதல்வர் ஆகி இருக்கிறார். தற்போது அவரின் மகன் முழுவதும் பொய்யாக பேசி வருகிறார்.
ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்.எந்த அமைச்சரும் தலைமை செயலகத்தில் இல்லை. எறியும் வீட்டில் பிடுங்குவது மிச்சம் என்பது போல அனைத்து அமைச்சரும் அவரவர் துறையில் ஊழல் செய்து கொள்ளையடிக்க திட்டமிட்டு வருவதாக குற்றச்சாட்டு வைத்தார்.
கொரோனா மக்கள் துன்பத்தை களைந்த அரசு அதிமுக அரசு. வேஸ்டி நழுவும் போது அதை எப்படி சரி செய்வோமோ அதுபோல மக்கள் சிரமப்படும் போது நேசக் கரம் நீட்டும் அரசு அதிமுக அரசு.
திமுக கொடுத்து பழக்கப்பட்ட கட்சியல்ல எடுத்து பழக்கப்பட்ட கட்சி.அதிமுகதான் கொடுத்து பழக்கப்பட்ட கட்சி. இந்தியாவிலேயே இலவச உணவு வழங்கிய அரசு தமிழக அரசுதான். திமுக அரசு தை பொங்கலுக்கு வழங்கிய பொருட்கள் தரமில்லை, பொங்கல் வைக்க வெல்லம் கொடுக்கவில்லை வெள்ளத்தை கொடுத்துவிட்டார்.
தமிழக நிதி அமைச்சர் திறமையானவர், பெட்ரோல் டீசல் விலை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்றார் தற்போது, மத்திய அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. ஆனால் மாநில அரசான திமுக அரசு இதுவரை குறைக்கவில்லை 25 மாநிலம் குறைத்தது, தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.
கூட்டுறவு வங்கியில் 5 சவரண் கீழ் வைத்தால் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அரசின் வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் நகை அடமான வைத்தனர். ஆனால் தற்போது திமுக அரசு தகுதியானவர்களுக்கு என கூறி வருகிறது. 13 லட்சம் பேருக்கு மட்டுமே கூட்டுறவு வங்கியில் கடன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 35 லட்சம் பேருக்கு ரத்து இல்லை. அவர்கள் மாதம் மாதம் வட்டி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்,
ஒருவரை ஏமாற்ற வேண்டும், அவரின் ஆசை தூண்ட வேண்டும் என திரைப்படத்தில் வசனம் வரும் அது போல திமுக செய்துள்ளது. கூட்டுறவு வங்கியில் திமுக அரசை நம்பி நகை வைத்து ஏமார்ந்த 35 லட்சம் பேர் எங்களுக்குத்தான ஓட்டு போடுவார்கள்.
திமுகவிடம் மக்களால் கொடுக்கப்பட்ட மனுக்கள் பெட்டியில் தூங்குகின்றன.
கட்சிகாரர்களை நம்பி ஸ்டலின் அரசு நடக்கவில்கை, ஏஜென்டை நம்பி நடத்துகிறார்.
அதிமுகவை சேர்ந்தவர் மதுரை மேயராக வரவேண்டும் எனவே அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.