Categories: தமிழகம்

சுடச்சுட கறி விருந்து.. விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு; ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் விழா..!

மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த சாதம், 200 கிடா கறி..! விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து (ONLY BOYS) நடைப்பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோயில் திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே  கருத்தலக்கம்பட்டி புதூர் வடகாட்டான் கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில், பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது. இக்கோவிலில், இருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே பெண் வர கட்டுப்பாடு கடைப்பிடித்து வரப்படுகிறது.

திருவிழாவில் பெண் குழந்தை  முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இக்கோவிலில் இருந்து விபூதி முதல் பூஜை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எந்த பொருளையும் கோவில் எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல அனுமதி இல்லை.

விழாவில் தமிழகத்தில் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, காய்கறி உள்ளிட்டவற்றை நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழா இவ்வாண்டு மே 28 செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து வடக்காட்டான் கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.

நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 300 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது.


இன்று நடந்த கறி விருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நத்தம்,செந்துறை,சாணார்பட்டி,குட்டுபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் செய்யப்படும் ஆட்டுக்கறி மற்றும் சாதம் மீதமானால் அப்பகுதியிலே குழி தோண்டி புதைக்கப்படும்.

Poorni

Recent Posts

ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!

வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…

8 hours ago

நான் சொல்றத செஞ்சு காட்டுங்க..இந்திய அணிக்கு சவால்..முன்னாள் பாகிஸ்.வீரர் சர்ச்சை பேச்சு.!

இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…

9 hours ago

அடேங்கப்பா…’குட் பேட் அக்லி’ டீசரில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்ளோ காஸ்ட்லீயா.!

அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…

9 hours ago

குடிகாரனுக்கு ஏன் பொண்ணு கேட்குதா…தூது விட்ட நபரை துரத்தி அடித்த பிரபல நடிகையின் அம்மா.!

அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…

10 hours ago

WHAT BRO..விஜய் மகன்னு எதுக்கு சொல்லுறீங்க..செய்தியார்களிடம் கடுப்பான நடிகர்.!

கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…

11 hours ago

Ind Vs Nz :விறு விறுப்பான நாக் அவுட் போட்டி..முதலிடத்தை தட்டிப் பறிக்க போவது யார்.!

பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…

13 hours ago

This website uses cookies.