இன்றே கடைசி… புரட்டாசி வருது… மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் குவிந்த அசைவப் பிரியர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2023, 10:40 am
இன்றே கடைசி… புரட்டாசி வருது… மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் குவிந்த அசைவப் பிரியர்கள்!!
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1200க்கு மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்
வழக்கமாக விடுமுறை தினத்தன்று அதிக அளவிலான மக்கள் மீன்கள் வாங்குவதற்காக காசிமேடு மீன் சந்தையில் குவிந்து வருவார்கள். அத்துடன் இன்று ஆவணி மாதத்தின் கடைசி நாளாகும்.
நாளை புரட்டாசி மாதம் தொடங்குகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்ப்பார்கள். ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிட முடியாது என்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் இன்று காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்து வருகின்றனர்.
அதே வேளையில், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. வஞ்சிரம் ரூ.500. வவ்வால் ரூ350, சங்கரா ரூ.300, இறால் ரூ.250, கடமா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.