கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் செயல்பட்டு வரும் கருவூல அலுவலகம் மேற்கூரையில் இருந்து வட மாநில நபர் ஒருவர் சட்டையின்றி, மாடியில் கிடந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு, கீழே நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது எரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் கருவூல அலுவலகம் மேலே ஏறி அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரது கை கால்களை கயிற்றால் கட்டி கீழே இறக்கினர். அந்த வட மாநில நபர் அசாம் பகுதியை சேர்ந்த விகாஷ் எனவும், மனவளர்ச்சி குன்றியவர் எனக் கூறப்படும் நிலையில், எவ்வாறு அவர் மேலே ஏறினார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர் மாடியில் இருந்து கற்களை வீசியதில் பொதுமக்கள் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அவரது உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பரபரப்பான சூழல் நிலவியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.