கரூர் அருகே வடமாநில தொழிலாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த புத்தம்பூர் பகுதியில் கரூர் ஜவுளி பூங்கா செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் இப்பகுதியில், அட்லஸ் எக்ஸ்போர்ட் என்டர்பிரைசஸ் என்ற தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில தொழிலாளி அசோக் தாஸ் மகன்ந் (37), கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஹெல்பர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் கடந்த மாதம் மூன்றாம் தேதி கரூர் திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்த அவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், அவரது மனைவி அனிதா மகன்ந் (34), மகள் முஸ்கன் சூர்யா ஆகிய இருவரும் அதே நிறுவனத்தில் பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தகவல் அறிந்து மருத்துவமனை சென்ற அவரது மனைவி அனிதா மகன்ந் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.