கழிவறை தான் எங்களுக்கு சமையலறை… வடமாநில தொழிலாளர்களை வஞ்சிக்கிறதா நிர்வாகம்? அரசுப் பள்ளியில் நேர்ந்த கொடுமை!

Author: Sudha
1 August 2024, 4:47 pm

திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியைச் செய்ய வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் சிலரை பள்ளி கழிவறை உள்ளே இருக்கும் அறையில் தனியே தங்க வைத்துள்ளனர்.

அந்த இளைஞர்கள் கடந்த ஒரு மாதமாக அங்கேயே தங்கி உணவு சமைத்து பணி செய்து வருகின்றனர் இது தொடர்பாக ஒரு நபர் உள்ளே சென்று எடுத்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக அவர்களை மாற்று இடத்தில் தங்க வைத்துள்ளது. துர்நாற்றம் வீசும் கழிவறை உள்ளே இருக்கும் அறையில் தொழிலாளர்களை தங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!