மதுபோதையில் இரு கும்பலிடையே மோதல்… போலீஸ்காரரை அடித்து விரட்டிய வடமாநில தொழிலாளர்கள்.. வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 8:19 pm

போலீஸ்காரரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. போதையில் அராஜகம் ; வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

சென்னை – அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கம் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஆயுதப்பூஜை கொண்டாடப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 200 வடமாநில இளைஞர்கள், மதுபோதையில் இருபிரிவுகளாக பிரிந்து மாறிமாறி தாக்கி ககொண்டனர்.

இது குறித்து வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய தலைமை காவலர் ரகுபதி (52) மற்றும் காவலர்கள் ராஜ்குமார், கிரி ஆகியோர் இரு பைக்குகளில் வந்தனர். அப்போது, அங்கு மோதலில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்களை தடுக்க முயன்றனர்.

அந்த சமயம் போதையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களின் வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதில், படுகாயமடைந்த காவலர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், போலீசாரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!