வீட்டில் தனியாக இருந்த 8ஆம் வகுப்பு மாணவி.. வடமாநில இளைஞர் பாலியல் சேட்டை.. டக்கென மாறிய காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2024, 2:14 pm

வீட்டில் தனியாக இருந்து 8ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர்

கோவை சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியும் 21 வயதான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞரும் கடந்த ஒரு மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும், அப்போது இளைஞன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போது மாணவியின் பெற்றோர் திடீரென வந்ததால் இளைஞர் தப்பி ஓடி உள்ளார்.

இதையும் படியுங்க: லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கோவை காந்திபுரம், காட்டூரில் உள்ள மாநகர, மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர். போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த இளைஞருடன் தங்கி இருந்த இருவரும் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து தப்பியோட இளைஞர் குறித்தான விவரங்களை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!