கெஞ்சிக் கேட்டும், மன்னிப்பு கூறியும் தமிழரை விடாத வடமாநில தொழிலாளர்கள் : மீண்டும் திருப்பூரில் பகீர்… வெளியான ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 8:55 am

திருப்பூர் – பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சம்பத் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக அதனது இரு சக்கர வாகனத்தில் பரமசிவம்பாளையம் வழியாக வந்த போது எதிர்பாராவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த வட இந்தியர் மீது மோதியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து அங்கிருந்த வட இந்தியர்கள் ஒன்று திரண்டு சம்பத்தை சிறை பிடித்து அவரிடமிருந்த பணத்தையும் பெற்று கொண்டு இரு சக்கர வாகன சாவியை தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பத் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அவ்வழியாக வந்த இன்னொருவரின் வாகனத்தில் சென்று தனது மகளை அழைத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://vimeo.com/795457510

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 860

    0

    0