கோவை அருகே திருதிருவென முழித்த வடமாநில இளைஞர் : கப்புனு பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan22 November 2022, 10:13 am
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வட மாநில இளைஞர் கைது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று(21.11.2022) தடாகம் காவல்துறையினர் கணுவாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த இளைஞர் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் பாஸ்போர்(வயது 24) என்பதும் அவரிடம் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து கஞ்சா மற்றும் அவரிடமிருந்த ரூ.10,500/- ரொக்க பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. அதே சமயத்தில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணியை தொடங்கினார்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் 17-ந் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கும் நடைதிறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.