ஐ.ஜி. வீட்டிலேயே கைவைத்த கொள்ளையர்கள்… ரொக்கம், நகை மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகளை திருடிச் சென்ற சம்பவம்..!!
Author: Babu Lakshmanan10 October 2022, 9:30 pm
திருவள்ளூர் ; ஊத்துகோட்டை அருகே வடக்குமண்டல ஐ.ஜி. வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள தாராட்சி பகுதியில் உள்ள சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் ஐ.ஜி.அன்பு. இவரது பூர்விக வீட்டின் பின்பக்கம் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், 1 ஒரு சவரன் தங்க நகை கொள்ளை என போலீசார் முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவுகளை செய்யும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ.ஜி வீட்டில் நடைபெற்ற துணிகர கொள்ளை சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.