கோவையில் ஆள் இருக்கும் வீடுகளுக்கு வெளியே தாழிட்ட வடமாநில இளைஞர் கைது : விசாரணையில் பகீர் வாக்குமூலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 4:55 pm

கோவை : உக்கடம், ஜி எம் நகர் பகுதியில் வீடுகளுக்கு வெளியே தாழ்ப்பாளிட்டு கொண்டிருந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் அருகில் இன்று காலை வட மாநில வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த பெண் ஒருவரிடம் போன் செய்ய செல்போன் கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அந்த பெண் செல்போனை தராமல் வீட்டினுள் சென்று விட அந்த வட மாநில வாலிபர் வீட்டிற்கு வெளியே கேட்டை தாழிட்டுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்த மக்கள் சந்தேகமடைந்து அந்த வாலிபரை பிடித்து காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராகுல் (வயது 18) எனவும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

போலிசார் விசாரணையில் அந்த வாலிபர் ஊருக்கு செல்ல பணமில்லாமல் இருந்ததால் அன்பு இல்லத்திற்கு ரயில்வே காவல்துறையினர் அனுப்பி வைத்ததும் அன்பு இல்லத்தில் இருந்து தப்பி வந்து அப்பகுதியில் இருந்த பெண்ணிடம் செல்போன் கேட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தற்போது அந்த வாலிபர் உக்கடம் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?