திமுக VS பாஜக அல்ல… பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவே இல்ல.. எல்லாமே ஒரு மாயை : திமுக அமைச்சர் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 9:28 pm

திமுக VS பாஜக அல்ல… பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவே இல்ல.. எல்லாமே ஒரு மாயை : திமுக அமைச்சர் விமர்சனம்!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் தேர்தல் களம் பிஜேபி வெர்சஸ் திமுக அல்ல. பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவே இல்லை வளர்ந்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்

பண பலத்தை வைத்துக்கொண்டு கட்சி வளர்வது போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைக்கின்றனர். திமுகவை எந்த கூட்டணியும் தொட முடியாது. தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்

எடப்பாடி ஆட்சியில் இருக்கும் போது எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை தற்போது நல்ல திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதேதோ உளறி வருகிறார்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எங்களுடைய சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து பேசி முதலமைச்சரிடம் கலந்து பேசி மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்

திமுக தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் கதாநாயகனாக இருக்கும். அதை இப்போது சொல்வது தவறு அது சஸ்பென்ஸ். மேகதாது அணையை தொடர்பாக தமிழக அரசு ஒப்புதல் வழங்குவதில்லை இது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் குழுவுடன் பேசி வருகிறார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்