இத்தனை நாளா ஒரு அரசு அதிகாரி கூட வரல.. ஆனா இப்போ.. திமுக அமைச்சர்கள் வந்த காரை வழிமறித்து மக்கள் வாக்குவாதம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கன மழை காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிந்து சேதம் அடைந்தது.
வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பல உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வயல்வெளிகளில் உள்ள பயிர் சேதங்களை பார்வையிடுவதற்காக வந்தனர்.
அவர்கள் சிவகளை அருகே வந்த பொழுது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை வாகனங்களை மறித்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
முற்றுகையில் பொதுமக்கள் வெள்ளம் சேதம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும் தற்போது வரையிலும் தங்களை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் வந்து சந்திக்கவில்லை என்றும் அரசின் சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேசிய அமைச்சர்கள் அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்கும் என்று கூறி சமாதானபடுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர்.அதன் பின்னர் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.