Swiggy, Zomato மட்டுமல்ல இவங்களுக்கும்தான்…. சுதந்திர தினத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 11:01 am

நாட்டின் 77வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்று மூன்றாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதன்பின் பேசிய முதலமைச்சர் திமுக அரசின் திட்டங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட வரலாறு பற்றி எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் ஓலா, உபேர், ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி பல்வேறு நகரங்களிலும் ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கி வருகின்றனர்.

நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார்.

விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிக்கும் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்றுள்ளார். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!