மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க விருப்பமில்லையா? அமைச்சர் கொடுத்த அரிய வாய்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2025, 4:27 pm

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், மூர்த்தி, செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மதுரை திண்டுக்கல் தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில் “தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், திருச்செந்தூருக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செந்தூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும்” என கூறினார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் “மழைநீர் வடிகாலோடு சாலை வசதிகள் செய்ய வேண்டும், தமிழகத்தில் ஐந்தரை இலட்சம் எல்.இ.டி விளக்குகள் போடப்பட்டுள்ளன,

Minister Nehru

கூடுதலாக 1 இலட்சத்து 50 ஆயிரம் எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்படும், புதிதாக பேருந்து நிலையங்கள், மார்கெட் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும், தமிழகத்தில் ஏற்கனவே 100 அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது,

கூடுதலாக அறிவுசார் மையங்கள் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும், நிலுவையில் குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் வேண்டும், குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க குடிநீர் வடிகால் வாரியம் கடந்த காலத்தை போல அல்லாமல் சுறு சுறுப்பாக செயலாற்ற வேண்டும்” என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில் “ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க 120 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மறு ஆய்வு செய்யப்படும்” என கூறினார்.

  • Sardar 2 Music Director Change திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!