எங்க வார்டுல ஒரு வருஷமா எதுவுமே செய்யல.. மேயருக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி..!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2024, 2:49 pm
எங்க வார்டுல ஒரு வருஷமா எதுவுமே செய்யல்.. மேயருக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி..!
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் அன்புடன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கவுன்சிலர்கள் பல்வேறு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
அப்போது 60வது வார்டை சேர்ந்தவர் காஜாமலை விஜி தனது வார்டுக்கு எந்தவித பணிகளும் மேற்கொள்வதில்லை என கூறியவுடன் கண்ணீரோடு தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஆணையரிடம் கொடுத்துவிட்டு அதன் நகலை மேயருக்கு கொடுத்துவிட்டு என்னுடைய வார்டில் பணி நடக்கவில்லை என்றால் நான் தீக்குளித்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு வேகமாக கீழே வந்தார்.
அவர் எங்கே தீக்குளித்து விடுவாரோ என்ற அச்சத்தில் சகமாமன்ற உறுப்பினர்கள் அவருக்கு சமாதானம் சொல்லி உடனடியாக வந்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவரிடத்தில் கூறினர். ஆனால், தான் மீண்டும் வர முடியாது என்று சொல்லி உடனடியாக காரில் இருந்து புறப்பட்டார்.
ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.
வெளியில் வந்த சகமாமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு சொல்வதை வீடியோ எடுத்த செய்தியாளர்களை யாரும் படமேடுக்க கூடாது என தடுத்து நிறுத்தினர்.
காஜாமலை விஜய் ஏற்கனவேமாநிலங்கள் அவை உறுப்பினர் சிவா வீட்டில் சென்று தாக்கியது தொடர்பாக வழக்கு நீதிமன்ற காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் அப்போது காஜாமலை விஜி உட்பட ஐந்து பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாய் இருந்தது காஜாமலை விஜய் உட்பட 5பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாய் இருந்தது.
இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்டு சென்ற காஜாமலை விஜி சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து திடீரென பெட்ரோல் தன் தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார்.
அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினரும் கட்சியினரும் அவரை தடுத்து நிறுத்தினர். அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினரும் கட்சியினரும் அவரே தடுத்து நிறுத்தினர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.