இனி எம் சாண்ட் பயன்படுத்துவோருக்கு.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 4:30 pm

கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்தும் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்து இருந்தது.

இந்த நிலையில் எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போதுமான சலுகைகள் வழங்கி அதனை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வந்தது.

எம்-சாண்டுக்கான புதிய கொள்கையை தமிழக முதல் அமைச்சர் வெளியிட்டு உள்ளார். இதன் மூலம், எம்-சாண்ட் உற்பத்தி செய்வதற்கான தனிப்பட்ட குவாரி குத்தகைகள் வழங்கப்பட மாட்டாது.

செயற்கை மணல், அரவை மணல் உற்பத்திக்கு தனிப்பட்ட குவாரி குத்தகைகள் வழங்கப்பட மாட்டாது என முதலமைச்சர் வெளியிட்டுள்ள செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவற்கான புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய கொள்கையில் மணல் விற்பனை விலை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கட்டுமானங்களுக்கு தேவையான எம்-சாண்ட் தடையில்லாமல் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.

வரும் நாட்களில் கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதனை உணர்ந்து முதலமைச்சர் புதிய கொள்கையை தலைமைச்செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 447

    0

    0