இனிமேல் தான் என் ஆட்டத்தை பார்க்க போறீங்க : திருப்பதி கோவிலில் சபதம் எடுத்த வனிதா விஜய்குமார்!!
Author: Udayachandran RadhaKrishnan30 May 2023, 3:43 pm
திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிட்ட பின் அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார்.

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர் தமிழில், நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்கள் வரிசையாக திரைக்கு வர உள்ளன. சமீபத்தில் நான் நடித்த படங்களில் அநீதி என்ற பெயரிலான படம் அடுத்து திரைக்கு வரும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் தெலுங்கில் நான் நடித்திருக்கும் மல்லி பெல்லி என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நான் திரைத்துறையில் காலடி வைத்த போது மிகவும் சிறிய பெண்.
அப்போது எனக்கு வயது 15. எனவே திரைத்துறையை பற்றி அவ்வளவாக நான் அப்போது அறிந்திருக்கவில்லை. இப்போது திரை துறையை நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன்.
நடிப்பு தொழிலுக்கு வரும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. திரைத்துறையில் என்னுடைய இரண்டாவது இன்னிங்சிற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நல்ல வரவேற்பு எனக்கு உள்ளது என்று அப்போது கூறினார்.