இனி ரயில்களில் WEDDING PHOTOSHOOT எடுக்கலாம்… எவ்ளோ கட்டணம் தெரியமா? வெளியான அறிவிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan9 ஜூன் 2023, 8:53 மணி
இந்தியாவில் தற்போது அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் போட்டோஷூட் முக்கியமாக இடம்பெற்று வருகிறது. திருமண விழா என்றால் நிச்சயத்தார்த்தம், திருமண விழா தவிர ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை ஜோடிகள் எடுத்து கொள்கினற்னர். அதேபோல் குழந்தைகளின் பிறந்தநாள் விழாவையொட்டியும் அவுட்டோர் போட்டோஷூட் எடுப்பது அதிகரித்து வருகிறது.
இதனால் தற்போது போட்டோஷூட் என்பது அதிகரித்து வருகிறது. இந்த போட்டோஷூட்டுக்காக ஒவ்வொருவரும் வெளிமாநிலங்கள் அல்லது தங்களின் ‘பேவரைட்’ இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் மதுரை ரயில் நிலையத்தில் ஜோடிகள் ‘ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்’ நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார். அதில் ”மதுரை ரயில் நிலையத்தில் புதுமண தம்பதியர் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி பல புகைப்படங்கள் எடுத்து கொள்ளலாம்.
ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூபாய் 1500. மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3000 (ரயில் பெட்டிக்கு கூடுதலாக ரூபாய் 1000) என தெரிவித்துள்ளார்.
இதனை இன்னும் தெளிவாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில் நிலையங்களில் போட்டோ மற்றும் வீடியோ போட்டோகிராபி எடுப்பதற்கான வழிக்காட்டுதல்கள் 2007 ல் வெளியிடப்பட்டன. இதன்மூலம் வணிகம் சாராத வகையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் செல்போன் கேமரா அல்லது டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தி ரயில் நிலையங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து கொள்ள முடியும்.
அந்த வகையில் தற்போது வணிகம் மற்றும் கல்விசார்ந்த விஷயங்களுக்கு ரயில் நிலையங்களில் போட்டோஷூட் நடத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
0
0