இனி தினமும் இலவசமாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் : சொந்த செலவில் அழைத்து செல்லும் எம்.எல்.ஏ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 4:05 pm

வேலூர் : வேலூர் மக்கள் இனி தினமும் திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய தனது சொந்த செலவில் ஏற்பாடுகளை செய்துள்ளார் அறங்காவல் குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார்.

வேலூர் மாவட்டம் திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திலிருந்து திருமலை திருப்பதிக்கு தினந்தோறும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் இலவசமாக பயணம் செய்து அவர்களுக்கு இலவசமாக தனது சொந்த செலவில் தரிசனம் மற்றும் உணவு வழங்கும் திட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு உறுப்பினரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் துவங்கி வைத்தார்.

இந்த வாகனம் தினந்தோறும் 12 பேருடன் சென்று அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.300 தரிசன கட்டணத்தை அறங்காவல் குழு உறுப்பினர் நந்தகுமார் தனது சொந்த செலவில் செலுத்தி அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வந்து வேலூரில் கொண்டு வந்து விடுகின்றனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை மக்கள் யார் வேண்டுமானாலும் இதன் மூலம் இலவசமாக திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய முடியும். இதற்கு ஆதார் எண் கொண்டு பதிவு செய்த சில தினங்களில் மக்கள் இலவசமாக அழைத்து செல்லப்பட்டு தரிசனம் முடிந்து அவர்களை மீண்டும் அழைத்து வந்து வேலூரில் விடுகின்றனர்.

மக்கள் இந்த சேவையை பயன்படுத்திகொள்ள வேண்டுமென அறங்காவல் குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றியக்குழு தலைவர் பாபு ஒன்றிய செயலாளர்கள் குமார பாண்டியன். வெங்கடேசன். ஞானசேகர். உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1775

    0

    0