நடிகை விஜயலட்சுமியை தூண்டி விடும் திமுக… மதுரை காவல் ஆணையரிடம் நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 9:36 pm

நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போலீஸ் மதுரை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர், பல்வேறு இடங்களில் காவல்துறையில் புகார் அளித்து வருகின்றனர். விஜயலட்சுமி பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே சீமான் மீது அவதூறு பரப்பி வருகிறார் என நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதாரங்களுடன் சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் சீமான் பெயருக்கு நடிகை விஜயலட்சுமி களங்கம் விளைவித்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் என பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.

விஜயலட்சுமி பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே சீமான் மீது அவதூறு பரப்பி வருவதாக குற்றம்சாட்டினர். மேலும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கலங்கம் ஏற்படுத்தும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் எனவும் தெரிவித்தனர்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல் உள்நோக்கத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டை நடிகை விஜயலட்சுமி கூறி வருகிறார். அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் விஜயலட்சுமி இது போன்ற பொய் புகார்களை கூறி வருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காவல்துறையில் புகார் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 353

    0

    0