ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திமுக – நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஈரோடு – வீரப்பன்சத்திரம் பகுதியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திமுக பணிமனை அருகே சீமான் பிரச்சாரம் மேற்கொண்ட போது, திடீரென இரு கட்சியினரும், கொடி கம்பங்கள், கற்கள், கட்டைகள் என கையில் இருக்கும் பொருட்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள்,பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் மீது கற்களை கொண்டு தாக்கியதால் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இவர்களை தடுக்க வந்த போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். சீமான் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திற்கு படையெடுத்து வந்த திமுகவினரை 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் விரட்டி அடித்ததால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த கலவரம் காரணமாக சீமான் அங்கிருந்து புறப்பட்டதாகவும், அவரின் பிரச்சார வாகனத்தில் செங்கல், கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நேரடி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது அப்பகுதியில் பதற்றமான ஒரு சூழ்நிலையை நிலவி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.