நாதகவில் இருந்து செல்பவர்களை நாங்களே அனுப்பி வைக்கிறோம் எனக் கூறிய சீமான், அவர்கள் ஸ்லீப்பர்செல்களாக இருப்பர் என்றார்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (நவ.22) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் உடனான திடீர் சந்திப்பு, பல்வேறு அரசியல் கருத்துகளை முன்வைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான், “நாங்கள் என்னப் பேசினோம் என்று இங்கே சொல்வது என்றால், உங்கள் முன்பாகவே அந்தச் சந்திப்பை நிகழ்த்திப் பேசிவிடலாமே. தனியாக எதற்கா பேச வேண்டும்? நானும் ரஜினிகாந்தும் சந்தித்ததன் மூலம் நாங்கள் இருவரும் சங்கி என்றால், அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரஜினியை அழைத்து அருகில் அமர வைத்துக்கொள்ளும் நீங்கள் (திமுக) என்ன?.
விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை என்றுமே அடைய முடியாது. அவதூறுகளைக் கடக்க விரும்பாதவன் வெற்றியைக் கடந்து செல்ல முடியாது. சங்கி என்றால் சகதோழன் அல்லது நண்பன் என்று தான் அர்த்தம். ரஜினிகாந்தைச் சந்தித்தது பற்றி நான் வெளிப்படையாகக் கூறுகிறேன்.
முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் கள்ள உறவு இல்லை, நல்ல உறவே இருக்கிறது. எங்களை சங்கி எனச் சொல்கிறார்கள். திமுகவை எதிர்த்தாலே சங்கியா?” என்று சீமான் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, நாதகவிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகிச் செல்கிறார்களே என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: நெருக்கமாக இருந்த காதலர்கள்.. கதவைத் தட்டியதும் காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது?
அதற்கு பதில் கூறிய சீமான், “நாங்கள் தான் அவர்களை அனுப்பி வைக்கிறோம். நாங்கள் தான் மரியாதையாகப் போய், எல்லாரையும் அனுப்பி வைக்கிறோம். அவர்களை வெவ்வேறு இயக்கங்களில் போய் சேர்ந்து, எங்களுக்காக உளவு பார்க்க அனுப்பி வைக்கிறோம். எங்களுடைய ஸ்லீப்பர் செல்களாக அவர்களை நாங்கள் அனுப்பி வைக்கிறோம்” என்றார்.