குடித்துவிட்டு ரூ.64,000 பில் கட்டாமல் ஓடினாரா சீமான்? வீடியோ வெளியிட்ட பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2024, 5:00 pm

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதோடு, தலைவரான சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

இந்நிலையில், திமுக நிர்வாகி ஜெயராமன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சேலம் மாவட்டத்தின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சீமான் அதிகளவில் மது அருந்தி, ஒரே இரவில் 64,000 ரூபாய் பில்லை கட்டாமல் ஓடிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹோட்டல் நிர்வாகம், மாவட்டத்தின் முக்கியவர்களிடம் புகார் தெரிவித்ததாகவும், பின்னர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தங்களால் முடிந்த அளவுக்கு ₹5000, ₹10,000 எனக் கொடுத்து அந்த பில்லின் தொகையை தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கட்சியின் உள்நிலை சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியுள்ளதோடு, பல நிர்வாகிகள் “இந்த அளவுக்கு அசிங்கப்பட்டு கட்சியில் தொடர வேண்டுமா” என்ற எண்ணத்தில் விலகியதாக ஜெயராமன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…