ஈழத்தில் நடந்தது தான் இப்ப பாலஸ்தீனத்தில் நடக்குது… இந்தியா ஆதரவு கொடுத்திட்டால் மட்டும் போதுமா..? சீமான் ஆவேசம்..!!
Author: Babu Lakshmanan20 October 2023, 6:04 pm
எனக்கு போட்டியே இல்லை என்றும், தேர்தலில் வெல்லனும் என்பதே எங்களின் இலக்கு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் தருமபுரியிலுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடைபெற்றது. முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது :- நாடாளுமன்ற தேர்தல், தொடர்பாக மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அந்த வகையில் தருமபுரியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டி. யாருடனும் கூட்டணி இல்லை.
இலவசங்களை வளர்ச்சி திட்டங்கள் என கூறிவிட முடியாது. கல்வியை தரமாக கொடுங்கள் என்கிறோம். ஒன்பது லட்சம் கடன் சுமை என்கிறார்கள். அதை எப்படி திருப்பி கட்டுவது. மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, வேட்டி சேலைகள் வழங்குகிறோம் என்பதே ஏழ்மை நிலைமையை தான் உணர்த்துகிறது.
பெரியார் சொல்லியது போல கள்ளு குடித்தவன் தெளிந்து விடுவான். அதைவிட சாதி, மதபோதை என்பது மிகமிக கொடுமை, கொடுமையானது. வணங்கும் தெய்வத்தை வீதியில் இழுத்து வருவது கொடுமையானது. மதம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
ஆளுநருக்கு சங்கரய்யா யார் என்று தெரியுமா..? மக்களால் தேர்ந்தெடுத்த பிரிதிநிதிகளுக்கு என்ன மரியாதை. பாஜக ஆளும் மாநிலத்தில் இதுபோன்ற ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்களா..? எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம் நியமனம் செய்யபட்ட தனி ஒருவருக்கு எப்படி வந்தது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் கர்நாடகாவில் ஓடும்போது, தமிழ் திரைப்படமான லியோ திரையிட விட்டாள் நாகராஜ் போன்றோர்கள் பிரச்சனை செய்வதற்கு யார். அவர் சீசனுக்கு சீசன் வந்து போகக் கூடியவர் அவ்வளவு தான். பங்காரு அடிகளார் இறப்பு என்பது பேரிழப்பு தான். நானே கருவறையில் மணி ஆட்டி பூஜை செய்திருக்கிறேன். அப்படிபட்டவரின் இழப்பு தமிழ் இனத்திற்கு பேரிழப்பு தான். அதை ஈடே செய்ய முடியாது.
எனக்கு போட்டியே இல்லை. தேர்தலில் வெல்லனும் என்பதே எங்களின் இலக்கு. நீட் தேர்வில் தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டீர்களா காங்கிரஸ் கையெழுத்திட்டது. பாஜக வளர்த்திருக்கிறது, இந்த கொடுமையை என்ன செய்வது. மோடி எதை பற்றியும் பேசமாட்டார். மான்கி பாத்தில் கதவை சாத்திக்கொண்டு பேசுவார்.
ஈழத்தில் என்ன நடந்ததோ, அதே தான் பாலஸ்தீனத்தில் நடந்து வருகிறது. அமெரிக்க ஆதரித்துவிட்டால், இந்தியா ஆதரித்து விட்டால், என்ன செய்வது, அவர்கள் அவர்களின் மண்ணிற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள், எனக் கூறினார்.