பார்க்கத்தான் கம்பீரம்… பழகினால் அவர் ஒரு குழந்தை தான் ; விஜயகாந்த் குறித்து சீமான் பேச்சு!!

Author: Babu Lakshmanan
29 December 2023, 2:43 pm

பார்க்கத்தான் கம்பீரம்… பழகினால் அவர் ஒரு குழந்தை தான் ; விஜயகாந்த் குறித்து சீமான் பேச்சு!!

விஜயகாந்த் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்யலாம் என்றும், ஆனால் அவரைபோல ஒரு சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான், முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்றாலே உங்களுக்கு அச்சம் என்பதும் துணிவும்தான். தவசி படத்தில் அவருடன் பணியாற்றும் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.

விஜயகாந்த் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைபோல ஒரு சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம். திரை உலகின் உச்சத்துக்கு சென்றபோதும், அதனை தலையில் ஏறாமல் பார்த்துகொண்டவர். ரஜினி, கமல் போன்றோர்கள் விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள்.

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கும் போதே, அரசியலுக்கு வந்து 10.5 விழுக்காடு வாக்குகள் வாங்கி எதிர்கட்சி அந்தஸ்த்து பெற்றது என்பது சாதாரண விசயம் அல்ல. விஜயகாந்த் பார்க்கத்தான் கம்பீரமா இருப்பாரு. ஆனால், பேசி பழகுவது மனது அளவில் அவர் ஒரு குழந்தைதான், என உருக்கமாக தெரிவித்தார்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 296

    0

    0