கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா மணலூர் திருமாந்துறை தோப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகள் வைஷ்ணவி (22). இவர், நர்சிங் படித்து முடித்து விட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். வைஷ்ணவி வேலை பார்க்கும் மருத்துவமனையில் 3வது மாடியில் செவிலியர்கள் தங்கி பணிபுரிய அறைகள் உள்ளன.
இந்த தங்கும் அறையில் சக செவிலியர்களுடன் வைஷ்ணவியும் தங்கியிருந்து சில மாதங்களாக அந்த மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்ற வைஷ்ணவி நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் வைஷ்ணவி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அறையில் தனது துப்பட்டாவால் தூக்கில் வைஷ்ணவி பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், மேற்கு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், வைஷ்ணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலயறிந்த வைஷ்ணவியின் உறவினர்கள், அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். மேலும் வைஷ்ணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலயறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். இதன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வைஷ்ணவி உறவினர்கள், அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
காவல்துறை குடியிருப்பு பகுதி அருகில் ஊர்வலமாக சென்றவர்களை அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன், தலைமையில் காவல்துறையினர் ஊர்வலமாக சென்றவர்களை 15 மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.
அங்கிருந்து 30க்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் மருத்துவமனை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற போது அரசு போக்குவரத்து கழகம் அருகே பெண்களையும் வலுக்கட்டயமாக இழுத்து வேனில் ஏற்ற சென்றபோது காவல்துறைக்கும் பெண்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்த வைஷ்ணவிக்கி நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினரும் மற்றும் உறவினர்களும் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.