தமிழகம்

மகன் முறை இளைஞரை காதலித்து இழுத்து ஓடிய சித்தி : தாலியை வீசிச் சென்ற நர்ஸ்.. கதறிய போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா இவரது கணவர் தனிகைவேல். முனியம்மாள் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் நிலையில் கணவரை பிரிந்து 24 வயது கொண்ட தேவி என்ற மகளுடன் வசித்து வருகிறார்.

தேவி டிப்ளமோ செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வீடுகளில் நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வீட்டிலேயே தங்கி மருத்துவம் பார்க்கும் செவிலியர் பணியை செய்து வந்தார்.

கடந்த நான்கு மாதங்களாக பணி இல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் தேவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமானார்.

இது குறித்து மகள் மாயமானதாக கண்டுபிடித்து தருமாறு பெண்ணின் தாய் முனியம்மாள் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியில் சாய்ராம் என்ற 19 வயது இளைஞனும் காணாமல் போனது குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரும் உறவினர்கள் என தெரியவந்ததால் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இன்று இரு தரப்பினரும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 19 வயது இளைஞரான சாய்ராமுக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான தேவிக்கும் சித்தி முறை வருவதாகவும் இருப்பினும் கடந்த மூன்று மாதங்களாக சாய்ராம் தேவி காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவில் திருமணம் நடைபெற்ற நிலையில் காவல் நிலையத்தில் விசாரணைக்காக இரு தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில் தேவியின் தாய் மாமனான மணி என்ற இளைஞர் தேவியை ஆறு வருடங்களாக காதலித்து வருவதும் தேவியும் மணி என்பார் தாய்மாமனை காதலித்து வந்ததாகவும் இதற்கிடையில் மூன்று மாதங்களாக தேவியின் நடவடிக்கைகள் மாற்றம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விசாரணை ஒரு புறம் சென்று கொண்டிருக்க திடீரென சோழவரம் அருகே காரனோடை பகுதியில் இருந்து விஜய் என்ற இளைஞரும் தன்னை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து தன்னிடம் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி பணம் பொருளாக வாங்கியதாகவும் தன்னை ஏன் ஏமாற்றினால் என்று கேள்விக்கு பதில் வேண்டுமென ஆதங்கத்துடன் தேவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் கொண்ட செல்போனோடு காவல் நிலையத்திற்கு விஜய் என்ற இளைஞர் வந்ததால் அடுத்த கட்ட பரபரப்பு மேலோங்கியது.

இதை அடுத்து கடுப்பான காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது போலீசாரே திகைத்துப் போகும் நிலையில் அதிர்ச்சி காத்திருந்தது.

செவிலியராக பணிபுரிந்து வந்த தேவி என்ற பெண் அடுத்தடுத்து சுமார் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் முதலியவைகளை பெற்றுக் கொண்டதாகவும் அதற்கான ஆதாரங்களை 19 வயது இளைஞரான சாய்ராம் தரப்பில் வந்த வழக்கறிஞர்கள் புகைப்படங்களுடன் காவல் நிலையத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பெண் வீட்டாரோ மகளை தன்னுடன் அழைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையிலும் 19 வயது இளைஞரான சாய்ராமின் பெற்றோரோ மருமகளுடன் வீட்டுக்கு செல்லலாம் என கனவுகளுடன் வழக்கறிஞர்களை நம்பி வாசலில் காத்திருந்த நிலையில் கடுப்பான காவல்துறையினரோ நாங்கள் காவல்துறை வேலை மட்டும்தான் செய்கிறோம் மற்ற எந்த வேலையும் செய்யவில்லை எங்களைப் பார்த்தால் எப்படி தெரிகிறது.

ஒழுங்காக அவரவர் பெற்றோர்களுடன் செல்லுங்கள் என கூறியும் இருவரும் மறுத்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் செவிலியர் பெண் பல்வேறு நபர்களை காதலித்து ஏமாற்றியது காவல்துறையினருக்கு தெரிந்து விட்டது.

இதற்கு மேல் போனால் நம்மையும் நமது தாயையும் சிறையில் அடைத்து வருவார்கள் என்ற உஷாரான தேவி தனது தாயுடன் செல்கிறேன் என ஒப்புக்கொண்டார்.

மனம் உடைந்த 19 வயது காதலன் சினிமா படங்களில் வருவது போல் தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு தேம்பி அழுது காவல் நிலையத்தின் வாசலில் நின்று கொண்டு காவல் நிலையத்தின் உள் இருந்த காதலியை உற்றுப் பார்த்து சென்ற நிலையில் பெண் வீட்டாரோ இளைஞரை தாக்கவேண்டும் என பேசிக்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர் அவர்களை முறைத்தபடி அனைவரது பிடிகளில் இருந்து திமிறி கொண்டு செல்ல ஒரு வழியாக 19 வயது இளைஞரான சாய்ராமை அடக்கி இரு சக்கர வாகனத்தில் அவர்களது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

மேலும் இருவரது தரப்பிலும் சமசராச பேச்சுவார்த்தை ஏற்படுத்தி அவர் அவரது பெற்றோர் வீட்டிற்கு காவல் துறையினர் அனுப்பிவைப்பதற்க்குள் படாத பாடுபட்டனர்.

திருமணம் என்ற பெயரில் இந்தப் பெண் கட்டியிருந்த தாலியை உறவினர்களுக்கு மத்தியில் மகனின் உறவினரிடம் அந்த பெண் கழட்டி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

21 minutes ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

54 minutes ago

இதெல்லாம் ஒரு படமா? தனுஷை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…

2 hours ago

கையிலும் காலிலும் விலங்கா..? நிர்வாகிகள் விலகல்.. சீமான் காட்டமான பதில்!

யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…

2 hours ago

டென்னிஸ் வீரர் நடாலுக்கு உருவாக்கப்பட்ட வாட்ச்.. இப்போ ஹர்திக் கையில் : விலை இத்தனை கோடியா?!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…

2 hours ago

This website uses cookies.