தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு வந்த நர்சிங் கல்லூரி மாணவி : அதிகாலை வீட்டில் நேர்ந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 4:55 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (வயது 22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் (அப்பல்லோ நர்சிங் இன்ஸ்டியூட்) பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்

இதனிடையே நேற்று கல்லூரியில் இருந்து இரவு தனது சொந்த ஊரான குடியாத்தம் வந்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை கார்த்திகாதேவி வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்யுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நர்சிங் கல்லூரி மாணவி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ