குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றினார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின.
தேவாலயத்துக்கு வரும் பெண்களுடன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ நெருக்கமாக இருந்துள்ளார். அதை அவர் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், சில பெண்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தான் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவின் ஆபாச லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாது அவரது லேப்டாப் மற்றும் செல்போனை சிலர் பறித்து சென்றுள்ளனர். அவர்கள் தான் செல்போனில் இருந்த பாதிரியாரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி நாகர்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ வாட்ஸ்-அப் மூலம் பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவித்து இருந்தார்.
அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளியூர் தப்பி செல்ல முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.