மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி : புனித ஸ்தலங்களில் திரண்ட மக்கள்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 10:17 am
Rameshwaram - Updatenews360
Quick Share

இந்துக்களின் புனித ஸ்தலமாகவும் தீர்த்த முக்தி ஸ்தலமாக ராமேஸ்வரம் விளங்கி வருகிறது. இங்கு தினமும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.

நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். முக்கியமாக அமாவாசை நாளன்று அதிக அளவில் மக்கள் தர்ப்பணம் செய்வர்.

மேலும் மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிலையில் இன்று மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரங்கணக்கான மக்கள் காலை முதலே ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 467

    0

    0