தஞ்சாவூர்: அரசுக்கு சொந்தமான திறந்தவெளி சிறை இடத்தை தனியார் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கட்டிடங்களை நான்கு வாரங்களுக்குள் அகற்றுமாறு கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பல்கலைக்கழகத்தில் நோட்டீஸ் ஒட்டினர்.
தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமலைசமுத்திரத்தில்சாஸ்திரா பல்கலைக்கழகம் தமிழக அரசின் திறந்தவெளிச்சிறைக்கு சொந்தமான நிலத்தில் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு கடந்த 2018 அக்டோபர் 3ம் தேதியுடன் காலக்கெடு முடிந்துவிட்டது. அப்போது வட்டாட்சியர் அருணகிரி பல்கலைக்கழகத்திற்கு சென்று அளவிடும் தொடங்கினர்.
பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து முன்னால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதிடம் மாணவர்கள் படிக்க கூடிய நேரத்தில் இதுபோன்று கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கல்வி பாதிக்கப்படும் என மனு அளித்தனர். அந்த மனு மீதான விளக்கத்தை அளிக்க அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி திட்டம் விளக்கம் கேட்டபோது ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது மூன்றாண்டுகளில் அந்தக்குழு எந்த ஒரு விசாரணையும் நடத்த நிலையில்,
புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு அந்தக் குழுவை கலைத்துவிட்டு தமிழக அரசு நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது அக்குழு தஞ்சை வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து இன்று அறிக்கை தாக்கல் செய்து அதில் நான்கு வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி (24.03.2022) அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்த நோட்டீஸ் தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகிகளும் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.