பாலியல் புகாரில் திடீர் திருப்பம்: சஸ்பென்ட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அதிகாரி அனுப்பிய கடிதம்: 8 பிரிவுகளில் வழக்கு…!!

Author: Sudha
15 August 2024, 5:29 pm

மதுரை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. சில நாட்களுக்கு முன் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 21 பெண் அலுவலர்களின் பெயர்களுடன் புகார் கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த புகார் குறித்து நடந்த விசாரணையில் இந்த பாலியல் புகாரில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலராக இருந்த ஜவஹருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

நிர்வாக காரணங்களுக்காக இவரை செல்லத்துரை சில மாதங்களுக்கு முன் ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளார். இதனால் பணி ஓய்வு பெற முடியவில்லை ஆத்திரமடைந்த ஜவஹர், சக பெண் அலுவலர்கள் 21 பெண்களின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் தயார் செய்தார்.

கையெழுத்து அடிப்படையில் இது போலி என உறுதி செய்யப்பட்டு ஜவஹர் மீது மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் செல்லத்துரை புகார் அளித்தார். உடன் 21 பெண் அலுவலர்களும் புகார் அளித்தனர்.

ஜவஹர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தல், மோசடியாக ஆவணங்களை தயார் செய்தல் உட்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ