குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள்… கால்கடுக்க வரிசையில் நிற்கும் பொதுமக்கள் ; மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி!!

Author: Babu Lakshmanan
4 March 2024, 2:07 pm

குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வர தாமதமானதால், கால் வலிக்க வரிசையில் நின்ற பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். தங்களது பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை மனுக்களாகவும், மாவட்ட ஆட்சியர் மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் காரணமாக திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனுக்களுடன் தங்களது கோரிக்கைகளையும் முன்வைக்க வருவது வழக்கம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது முப்பது மணிக்கு அதிகாரிகள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து விடுவார்கள். 9.40 மணிக்கு மனுக்கள் ரசீது பொதுமக்களுக்கு வழங்கப்படும். 10 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை புகார் மக்களாக வழங்குவது வழக்கம்.

தற்போது தொடர்ந்து திங்கட்கிழமைகளில் அதிகாரிகளை 10 மணிக்கு மேல் வருவதும், 10.30 மணிக்கு மேல் ரசிது வழங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மேல்மலை பகுதிகள் நத்தம், செந்துறை,குஜிலியம்பாறை, கூடலூர், நிலக்கோட்டை, விளாம்பட்டி, பழனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் கடை கோடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை குறைகளாக மனுக்களுடன் வந்து காத்திருக்கின்றனர். ஆனால், அதிகாரிகள் தற்போது வரை வராதால் 9 மணியிலிருந்து முதியவர் முதல் ஆண்கள், பெண்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதன் காரணமாக மாற்று ஏற்பாடு செய்து விடுவோம், என்று கூறுகின்றனர்.

வருவாய்த் துறையினர் போராட்டம் நடப்பது அதிகாரிகளுக்கு தெரியாதா..? திங்கட்கிழமை மனுக்கள் வாங்கப்படும் என தெரியாதா..? முன்னேற்பாடு செய்ய வேண்டாமா..? என பல கேள்விகளை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ