அதிகாரிகளின் துணையோடு டாஸ்மாக் பார் டெண்டர் ஏலத்தில் முறைகேடு : பார் உரிமையாளர் சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan19 August 2022, 9:17 am
தூத்துக்குடி : தூத்துக்குடி டாஸ்மாக் பார் டெண்டர் ஏலத்தில் அதிகாரிகள் துணையுடன் முறைகேடு நடப்பதாக பார் உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 140 டாஸ்மாக் கடைகளுக்கான டெண்டர் நேற்று தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்ட முழுவதும் இருந்து ஏலம் எடுக்க ஆயிரக்கணக்கான பார் உரிமையாளர்கள் திரண்டு இருந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன் பார் டெண்டர் நடைபெற்று வருகிறது.
இந்தத் டென்டரில் தூத்துக்குடி தாலுகா டாஸ்மாக் பார்களை தவிர, மற்ற பகுதிகளுக்கு வெளி மாவட்ட நபர்கள் பலர் டெண்டருக்கு வராமல் அதிகாரிகள் துணையுடன் பார் டெண்டரில் கலந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளே துணை போவதாகவும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
எனவே, தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.