VIP வாகனங்கள் தான் முக்கியமா..? 137 ஆண்டு பாரம்பரியமிக்க வைகை AV மேம்பாலச்சுவர் உடைப்பு : கொந்தளிக்கும் மதுரை மக்கள்!!

Author: Babu Lakshmanan
3 May 2023, 8:55 pm

மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தரும் நிகழ்ச்சியை பார்க்க வரும் விஐபிகளுக்காக 137 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஏவி மேம்பாலத்தின் சுவரை உடைத்து தனிப்பாதை அமைத்துள்ளதோடு வைகை ஆற்றின் உள்ளேயே அவர்கள் வாகனங்களை நிறுத்தவதற்கு பார்க்கிங் அமைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை சித்திரைத்திருவிழா தொடங்கி விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று திருக்கல்யாணம், இன்று தேர்த்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்தது. மே 5-ம் தேதியன்று சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த திருவிழாவில் 15 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை இணைந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் விஐபிக்களின் வாகனங்கள் வருவதற்காக பாரம்பரிய பாலத்தின் கைப்பிடி சுவரை உடைத்து பாதை அமைத்துள்ளனர்.

மேலும், அவர்கள் வாகனங்களை மூங்கில்கடை தெரு வழியாக அனுமதித்து ஆழ்வார்புரம் வைகை ஆற்றின் உள்ளேயே 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்துவுதற்கு தனி பார்க்கிங் ஏரியா அமைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 354

    0

    0