டாஸ்மாக் கடையில் காத்திருந்து மதுபானம் வாங்கிய மூதாட்டிகள் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2023, 7:11 pm

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மூதாட்டிகள் இருவர் நீண்டநேரமாக காத்திருந்து மதுபானத்தை வாங்கிய பின்னர் ஒரு மூதாட்டி மதுபாட்டிலை எடுத்துசென்று குடிப்பதற்காக வாங்கி செல்கின்றார். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று பேருந்து நிலையங்கள் ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுபான கடைகள் அமைக்கப்படுவதால் தூண்டுதலுக்கு ஆளாகி பெண்களே மது பாட்டில்களை வாங்கும் அவல நிலை நீடித்து வருகிறது

திமுக அரசு படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும் என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தனியார் மதுபான கடைகளுக்கும் பார்களுக்கும் அனுமதி அளித்த நிலையில் தற்போது மட்டும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து 500 கடைகள் மூடப்படுவதாக நாடகம் நடத்துகிறது.

https://vimeo.com/838654119?share=copy

மூடப்படக்கூடிய மதுபான கடைகள் அருகில் தனியார் மதுபான கடைகள் இருப்பதால் அவற்றிற்கு ஆதரவாக தான் இது போன்ற அரசு மதுபான கடைகள் மூடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!