அரசு பேருந்தில் எம்ஜிஆர் பாட்டுக்கு மெய்மறந்து நடனமாடிய மூதாட்டி : வைரலாகும் CUTE வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 12:42 pm

அரசு பேருந்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆர்.பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது

அப்போது முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடல் பேருந்தில் ஒலிக்கவே பயணம் செய்த மூதாட்டி ஒருவர் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உற்சாகமாக பாடலுக்கு தகுந்தபடி நடனம் ஆடினார்.

மூதாட்டி நடனத்தை சக பயணிகள் கண்டு ரசித்ததோடு தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அந்த வீடியோவை பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட, தற்பொழுது இந்த மூதாட்டியின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!