சேலை கட்டியபடி தாமிரபரணி ஆற்றில் தலைகீழாக குதித்த மூதாட்டி : ‘உண்மையாலுமே செம தில்லு தான்’.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 11:20 am

தாமிரபரணி ஆற்றில் சேலை கட்டிய மூதாட்டி ஒருவர் ஆற்றில் குதிந்து நெகிழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, ஆறு, குளம் மற்றும் கடல் என்று எந்த நீர்நிலைகளை பார்த்தாலும், அதில் ஆனந்த குளியலை போட வேண்டும் என்பது இளசுகளின் எண்ணமாக இருக்கும். இதில் எங்களுக்கு ஒன்றும் விதிவிலக்கல்ல என்பது போல மூதாட்டி ஒருவர் ஆற்றில் குதித்து நெகிழ்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகில் நிகழும் வித்தியாசமான நிகழ்வுகளை சமூகவலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்து வரும் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ், பகிர்ந்துள்ள இந்த வீடியோ, தமிழகத்தைச் சேர்ந்த மூதாட்டியுடையது ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் கல்லிடக்குறிச்சியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில், சேலை கட்டிய மூதாட்டி ஒருவர், பாலத்தின் மேல் பகுதியில் இருந்து குதித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். முதலில் நேராக குதிக்கும் அவர், பின்னர் தலைகீழாகவும் குதித்து குஷியாகினார்.

இதனை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு, நிச்சயம் இது பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?