திமுக எம்பியின் காலில் விழுந்து அழுது புரண்ட மூத்த திமுக பிரமுகர் ; மக்கள் தொடர்பு முகாமில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
21 April 2023, 10:45 am

திண்டுக்கல் ; வத்தலகுண்டுவில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் திண்டுக்கல் திமுக எம்பியின் காலில் திமுக பிரமுகர் விழுந்து அழுது புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வத்தலகுண்டுவில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் திண்டுக்கல் திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி கலந்துகொண்டு, வத்தலகுண்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட, கிராம பொதுமக்களிடம் முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் நிகழ்ச்சி முடித்து, வெளியே சென்றபோது, வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டை கிராமம், கே.உச்சப்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் (60) என்பவர், தனது தந்தை சிவனாண்டி தேவர் என்பவர் கடந்த 1974-ஆம் ஆண்டு இறந்துவிட்டதால், அவருக்கு இறப்புச் சான்று கேட்டு, கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு அதிகாரியிடம் மனு கொடுத்து கடந்த 48 வருடங்களாக போராடி வருவதாகவும், அதிகாரிகள் இறப்பு சான்று கொடுக்க மறுத்து வருவதாக கூறி, திண்டுக்கல் பாராளுமன்ற திமுக உறுப்பினர் வேலுச்சாமி காலில், திடீர் என, விழுந்து கெஞ்சினார்.

திமுக பிரமுகரான பரமசிவம், திமுக எம்பி வேலுச்சாமி காலில் விழுந்து அழுது புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, விசாரணை செய்த திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைவில் இறப்பு சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தின் போது, இறப்புச் சான்று கேட்டு சிவனாண்டிதேவரின் மகன்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ட முத்துசாமி (80) சிவன்காளை (65) பரமசிவம் (60) மகள்கள் கருப்பாயி (75) சுந்தரி (70) ஆகியோரும் எம்பி வேலுச்சாமியிடம் இறப்பு சான்று கேட்டு கோரிக்கை வைத்தனர்.

https://player.vimeo.com/video/819738515?h=ea5f86b090&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இதுகுறித்து, பரமசிவம் கூறுகையில், ‘தனது தந்தை இறந்துவிட்டார். அவருக்கு இறப்பு சான்று வழங்க வேண்டும். அல்லது அவர் உயிரோடு இருந்தால் அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்,’ என கோரிக்கை வைத்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 488

    0

    0