குடிபோதையில் முதியவரை அடித்தே கொன்ற இளைஞர்கள் ; சிசிடிவி காட்சிகளை வைத்து இருவர் கைது!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 9:59 pm

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே முதியவரை குடிபோதையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் கூனங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து (60). முதியவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது பேச்சிமுத்து மற்றும் சித்து ஆகிய இரண்டு வாலிபர்களின் செல்போனை எடுத்ததாக கூறி, இரண்டு வாலிபர்கள் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு குடிபோதையில் முதியவரை அடித்தே கொன்றனர்.

இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அருகில் இருந்த கடையில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவினை எடுத்து தப்பிச்சென்ற பேச்சிமுத்து மற்றும் சித்து ஆகிய இரண்டு வாலிபர்களை வலை வீசி தேடி கைது செய்தனர். மேலும், கொலை செய்த இருவரும் குடிபோதையில் இருந்ததால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை என்பது அமோகமாக நடைபெறுவதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 479

    0

    0