அலட்சியம் காட்டிய அதிகாரி..? விரக்தியில் முதியவர்… VAO அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி..!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 12:55 pm

ராணிப்பேட்டை : நீண்ட நாட்களாக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலாஜாப்பேட்டை அடுத்த செங்காடு மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைய உள்ள நிலையில், தனது 16 செண்ட் நிலத்தை அளவீடு செய்து தருமாறு கூறி கிராம நிர்வாக அலுவலர் பழனியிடம் மனு அளித்துள்ளார்.

ஆனால் பலமுறை பணம் கட்டியும் இடத்தை அளக்க வராமல் கிராம நிர்வாக அலுவலர் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமடைந்த முருகேசன் இன்று VAO அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை மீட்ட ஊழியர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 761

    0

    0