‘எவன் செத்தாலும் உங்களுக்கு என்ன..? உங்களுக்கு பணம் போதும்’… கெட்டுப்போன ஆட்டுக்கறி விற்பனை… கையோடு தூக்கி வந்த ஆட்டோ ஓட்டுநர்…!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 2:24 pm

வாணியம்பாடியில் ஆட்டு தொட்டியில் பழைய ஆட்டுகறி விற்றதாக கூறி ஆட்டோ டிரைவர் வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியில் இயங்கி வரும் ஆட்டு தொட்டியில் தினம் தினம் புதியதாக ஆடு வெட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வழக்கம். இதனால், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சென்று ஆட்டுகறி வாங்கி வருகின்றனர்.

நேற்று அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலசந்தர் என்பவர் ஆட்டு தொட்டியில் ஆட்டுக்கால் மற்றும் ஆட்டுத் தலை வாங்கி வந்ததாகவும், அதனை வீட்டில் சமைக்கும் போது பழைய கறி என தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனை ஆட்டோ ஓட்டுநர் ஆட்டு தொட்டிக்கு கறியுடன் சென்று கேட்டுள்ளார். அப்போது, கறி வியாபாரி தவறி வரும் அதை கேட்காதே எனவும், அப்படி தான் பழைய கறி விற்போம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று வாடிக்கையாளரை திட்டியுள்ளார்.

அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்று பழைய கறியை வியாபாரம் செய்யும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 980

    0

    1